ரூ.1500 கோடியை அபகரிக்க முயற்சி, சொகுசு வாழ்க்கைக்கு ஆசை பவித்ரா லோகேஷ் குறித்து முதல் கணவர் பரபரப்பு தகவல்
|பவித்ரா ஆடம்பர வாழ்க்கையை விரும்புகிறார், அந்த வாழ்க்கைக்காக அவர் எதையும் செய்வார் என முதல் கணவர் கூறி உள்ளார்.
ஐதராபாத்
நரேஷ்-பவித்ரா லோகேஷ் திருமணம் கடந்த சில மாதங்களாக தெலுங்கு பட உலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
நரேஷ் மற்றும் பவித்ரா லோகேஷ் திருமணத்திற்கு பிறகு துபாய்க்கு தேனிலவு சென்று உள்ளனர். தற்போது பவித்ரா லோகேஷின் முதல் கணவர் சுசேந்திர பிரசாத் தனது மவுனத்தை கலைத்துள்ளார்.லோகேஷின் நடத்தை குறித்து அவர் பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளார்.
பவித்ரா ஆடம்பர வாழ்க்கையை விரும்புகிறார், அந்த வாழ்க்கைக்காக அவர் எதையும் செய்வார். அவர் ஒரு சந்தர்ப்பவாதி. நரேஷின் விஷயத்தில் வித்தியாசமான பிளான் போட்டு உள்ளார். அவரின் ரூ.1500 கோடி சொத்தை அபகரிப்பதற்காக நரேசுடன் திருமண நாடக்ம் தொடங்கியுள்ளார்.
பணத்துக்காக என்னை விவாகரத்து செய்தார் பவித்ரா லோகேஷ். நரேஷ்க்கு இது இன்னும் புரியவில்லை.என்றாவது ஒரு நாள் தெரிந்து கொள்வார் என கூறினார்.
நரேஷின் 4வது மனைவி பவித்ரா லோகேஷ். பவித்ரா லோகேஷை சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொள்ள நரேஷ் தனது 3வது மனைவி ரம்யா ரகுபதிக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால் ரம்யா விவாகரத்துக்கு சம்மதிக்கவில்லை.