< Back
சினிமா செய்திகள்
பதான் தேச பக்தி படம்: எதிர்ப்பாளர்களுக்கு ஷாருக்கான் பதில்
சினிமா செய்திகள்

'பதான்' தேச பக்தி படம்: எதிர்ப்பாளர்களுக்கு ஷாருக்கான் பதில்

தினத்தந்தி
|
20 Dec 2022 7:55 AM IST

‘பதான்’ தேச பக்தி படம் என பதான் படம் குறித்து ஷாருக்கான் கருத்து தெரிவித்து உள்ளார்.

ஷாருக்கான், தீபிகா படுகோனே ஜோடியாக நடித்துள்ள 'பதான்' இந்தி படம் தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளிலும் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் ஷாருக்கானுடன் தீபிகா படுகோனே காவி நிற நீச்சல் உடையில் ஆடிய குத்தாட்ட வீடியோ வெளியாகி இந்துக்கள் மனதை புண்படுத்தி உள்ளதாகவும், படத்தை தடை செய்ய வேண்டும் என்றும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன. ஷாருக்கானின் கொடும்பாவியை எரித்து போராட்டம் நடந்தது. பாடல் காட்சியில் இடம் பெற்றுள்ள காவி உடை மற்றும் வரிகளை நீக்க வேண்டும் என்று மத்திய பிரதேச உள்துறை மந்திரி நரோத்தம் மிஸ்ரா வற்புறுத்தி உள்ளார். படத்தில் வரம்பு மீறிய ஆபாச காட்சிகள் இருப்பதாக இஸ்லாமிய அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. பதான் படம் திரையிடப்படும் தியேட்டர்களை கொளுத்துவோம் என்று அயோத்தி அனுமன் காரி அமைப்பு எச்சரித்து உள்ளது.

இந்த நிலையில் பதான் படம் குறித்து ஷாருக்கான் கருத்து தெரிவித்து உள்ளார். அவர் கூறும்போது, '' பதான் என்ன மாதிரியான படம் என்று கேட்கிறார்கள். பதான் ஒரு தேச பக்தி படம். சமூக வலைத்தளங்களில் மோசமான கருத்துக்கள் வருகின்றன. நான் நேர்மறையாகவே இருக்கிறேன்" என்றார்.

மேலும் செய்திகள்