< Back
சினிமா செய்திகள்
பதான் உலக அளவில் ரூ. 600 கோடி ; இந்தியாவில் ரூ.300 கோடிவசூல் சாதனை
சினிமா செய்திகள்

பதான் உலக அளவில் ரூ. 600 கோடி ; இந்தியாவில் ரூ.300 கோடிவசூல் சாதனை

தினத்தந்தி
|
31 Jan 2023 11:16 AM IST

பதான் படத்தின் இந்தி வசூல் இப்போது சுமார் ரூ.296 கோடியாக உள்ளது, இது செவ்வாயன்று ரூ.300 கோடியைத் தாண்டும் என்பதை உறுதிப்படுத்துகிறது.

மும்பை

இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் "பதான்". இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடித்திருக்கிறார்.

மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்தின் பாடல் தீபிகா படுகோனே ஆடைகள் ஏற்படுத்திய சர்ச்சையால் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்புகளும் அதிகரித்தன. பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் இப்படம் கடந்த 25-ஆம் தேதி இந்தியா முழுவதிலும் 8000 திரையரங்குகளில் வெளியானது.

இந்நிலையில் பதான் படம் வெளியான நான்கு நாட்களில் பாக்ஸ் ஆபிஸில் ரூ.402 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்தன. பதான் உலகம் முழுவதும் ஐந்து நாட்களில் 500 கோடிக்குமேல் வசூல் செய்து சாதனை படைத்து உள்ளது.

ஜனவரி 25ஆம் தேதி வெளியான பதான் திரைப்படம் ஐந்து நாட்களில் ரூ.542 கோடி வசூலித்துள்ளது. இப்படம் ஏற்கனவே இந்தி பாக்ஸ் ஆபிஸில் பெரும்பாலான தொடக்க வார இறுதி சாதனைகளை முறியடித்துள்ளது மற்றும் எல்லா காலத்திலும் அதிக வசூல் செய்த இந்தி படங்களில் ஒன்றாகும்.

எல்லா காலத்திலும் அதிக வசூல் செய்த டாப்-10 இந்தி படங்களில் நுழைந்துள்ளது. கேஜிஎப் அத்தியாயம் 2 மற்றும் ஆர்ஆர்ஆர் ஆகிய படங்களைத் தொடர்ந்து இப்படம் இப்போது அதிக வசூல் செய்த மூன்றாவது இந்தியத் திரைப்படமாகும். இது விக்ரம் மற்றும் பொன்னியின் செல்வன் வசூலை முந்தியுள்ளது.

திரைப்பட வர்த்தக ஆய்வாளரான ரமேஷ் பாலாவின் கூற்றுப்படி, உலகளவில் பதான் ரூ 600 கோடி வசூலித்துள்ளது. அவர் டுவிட்டரில், பதான் ரூ 600 கோடி வசூலுடன் ஆல் டைம் டாப் 10 இந்திய வசூல் படங்கள் பட்டியலில் நுழைந்துள்ளது என குறிப்பிட்டு உள்ளார்.

மேலும் செய்திகள்