< Back
சினிமா செய்திகள்
கதாநாயகனாக பசுபதி
சினிமா செய்திகள்

கதாநாயகனாக பசுபதி

தினத்தந்தி
|
9 Jun 2023 7:06 AM IST

தமிழில் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து பிரபல நடிகராக வலம் வந்த பசுபதி நடிப்பில் சார்பட்டா பரம்பரை படம் கடந்த 2021-ல் வந்தது. அதன்பிறகு படங்களில் அவர் நடிக்கவில்லை. நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது தங்கலான், தண்டட்டி ஆகிய படங்களில் மீண்டும் நடித்து வருகிறார்.

தண்டட்டி படத்தில் கதையின் நாயகனாக வருகிறார். இதில் ரோகிணி, விவேக் பிரசன்னா, அம்மு அபிராமி, தீபா உள்ளிட்ட மேலும் பலர் நடித்துள்ளனர். சுந்தரமூர்த்தி இசையில் மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவில் தயாராகி உள்ள இந்த படத்தை ராம் சங்கையா டைரக்டு செய்துள்ளார். லட்சுமண் குமார் தயாரித்துள்ளார். மூதாட்டிகள் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்

பசுபதி கூறும்போது, "சார்பட்டா பரம்பரை' படம் முடிந்ததும் தண்டட்டி கதையை கேட்டேன். பிடித்து இருந்தது. எனக்கு எப்போதுமே எனது பாட்டியின் தண்டட்டி மீது காதல் இருந்தது. சிறுவயதில் அவர்கள் அணிந்திருந்த தண்டட்டியை சுட்டு விடலாம் என பல நாட்கள் முயற்சி செய்தேன். ஆனால் முடியவில்லை. நல்ல படத்திற்கான எல்லா தகுதியும் இந்த படத்துக்கு இருக்கிறது'' என்றார்.

மேலும் செய்திகள்