< Back
சினிமா செய்திகள்
தங்கலான் பட நடிகையின் ஹோம் டூர்
சினிமா செய்திகள்

தங்கலான் பட நடிகையின் ஹோம் டூர்

தினத்தந்தி
|
23 March 2024 4:13 PM IST

கேரள நடிகை பார்வதி திருவோத்து வீடியோவில், வீட்டின் சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தை விவரிப்பதைக் காணலாம்.

"பூ" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மலையாள நடிகை பார்வதி. தனது 17 வருட சினிமா வாழ்வில் தமிழில், விரல் விட்டு எண்ணக்கூடிய படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் மலையாளத்தில் நல்ல கதைகளைத் தேர்வு செய்து சிறப்பாக நடித்து வருகிறார். சினிமா மட்டுமல்லாது சினிமாவில் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள், சமூக பிரச்னைகள் என அனைத்துக்கும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.

அவர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அதில் "என்னுடைய வீடு அமைதியாக இருக்க காரணம், நிறைய செடிகள் எனது வீட்டின் பால்கனியில் உள்ளன. வீட்டில் உள்ள 36 செடிகளுக்கு தாயாக இருப்பதாக உணர்கிறேன். என்னிடம் ஒரு மாமரம் இருக்கிறது, அது நல்ல பழங்களை கொடுக்கின்றது. என் வீட்டில் ஒரு எலுமிச்சை மரம் உள்ளது, நான் சிட்ரஸ் பழத்தை எடுத்து என் சாலட்டில் வைக்கிறேன். மேலும் 18 ஆண்டுகள் கடந்த ஒரு சிறிய புதர்செடி உள்ளது." என்றார்.

"எனது வீட்டின் மற்றொரு சிறப்பம்சம் நூலகம் ஆகும். எனக்கு தனிமையாக இருக்க பிடிக்கும். அதனால் எனது வீட்டின் பால்கனியானது வெளியிலிருந்து யாராலும் பார்க்க முடியாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சில நாட்களில், நான் அதிகாலையில் எழுந்து ஒரு கோப்பை தேநீர் தயாரித்து, பால்கனியில் உட்கார்ந்து, 'நான் இப்படி ஒரு வீட்டில் வசிக்கிறேனா' என்று ஆச்சரியப்பட்டு இருக்கிறேன்," என்று அவர் கூறியுள்ளார்.

தமிழ் சினிமா இந்த வருடம் எதிர்பார்த்துக் காத்திருக்கும் படைப்புகளில் முக்கியமானது பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் `தங்கலான்'. இதில் விக்ரம், பார்வதி , மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிடோர் நடித்துள்ளனர்.

மேலும் செய்திகள்