தவறான முடிவு எடுத்து வருந்தும் பார்வதி நாயர்
|தமிழில் உத்தம வில்லன், மாலை நேரத்து மயக்கம், எங்கிட்ட மோதாதே, நிமிர், சீதக்காதி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பார்வதி நாயர் மலையாளத்திலும் முன்னணி நடிகையாக இருக்கிறார். சினிமா அனுபவங்கள் குறித்து பார்வதி நாயர் அளித்துள்ள பேட்டியில்,
''எல்லா துறையில் இருப்பவர்களுக்கும் அதிர்ஷ்டம் மிகவும் முக்கியம். அது ஒரு முறை தான் கதவை தட்டும், உடனே திறந்து விட வேண்டும். அர்ஜுன் ரெட்டி பட வாய்ப்பு முதலில் எனக்கு வந்தது. அதில் முத்த காட்சி மற்றும் நெருக்கமான காட்சிகள், அதிகம் இருந்ததால் நடிக்க மறுத்தேன். அந்த படத்தை நான் விட்டு இருக்கக்கூடாது. படம் பார்த்த பிறகு மிகவும் வருத்தம் அடைந்தேன். அது ஒரு அழகான படம். அந்த படத்தில் நடிக்க மறுத்தது நான் செய்த பெரிய தவறு. அதேபோல எனது வாழ்க்கையில் எனக்கு கிடைத்த ஒரு அற்புதமான வாய்ப்பை என்னால் மறக்க முடியாது. அது கமல்ஹாசனுடன் நடித்தது. இன்று நினைத்தால் கூட அதை என்னால் நம்ப முடியவில்லை. சினிமாவில் சகாப்தமாக விளங்கும் கமல்ஹாசனுடன் நடித்த அனுபவம் என்னை இன்றைக்கும் பூரிப்படைய செய்கிறது. ஒரே மாதிரியான கதாபாத்திரங்களை திரும்பத்திரும்ப செய்வது எனக்கு பிடிக்காது'' என்றார்.