< Back
சினிமா செய்திகள்
பரவுதுங்க பரவுது... கவனம் ஈர்க்கும் சந்தானம் படத்தின் பாடல்
சினிமா செய்திகள்

பரவுதுங்க பரவுது... கவனம் ஈர்க்கும் சந்தானம் படத்தின் பாடல்

தினத்தந்தி
|
30 Jan 2024 4:17 AM IST

'வடக்குப்பட்டி ராமசாமி' திரைப்படம் பிப்ரவரி 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

சென்னை,

'டிக்கிலோனா' படத்தின் இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'வடக்குப்பட்டி ராமசாமி'. இந்த படத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் ஜான் விஜய், எம்.எஸ்.பாஸ்கர், ரவி மரியா, மாறன், மொட்ட ராஜேந்திரன், நிழல்கள் ரவி, சேஷு, இட் ஈஸ் பிரசாந்த், ஜாக்குலின் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபத்திரங்களில் நடித்துள்ளனர்.

பீப்பிள் மீடியா பேக்டரி தயாரிக்கும் இந்த படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். தீபக் ஒளிப்பதிவு செய்துள்ளார். சிவன் நந்தீஸ்வரன் படத்தொகுப்பு பணியை மேற்கொண்டுள்ளார். இந்த படம் பிப்ரவரி 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் மற்றும் முதல் பாடல் வெளியாகி கவனம் பெற்றது.

இந்த நிலையில், 'வடக்குப்பட்டி ராமசாமி' படத்தின் இரண்டாவது பாடலான 'பரவுது' என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. அறிவு எழுதியுள்ள இந்த பாடலை அந்தோணி தாசன் பாடியுள்ளார். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்