< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
'பருத்திவீரன்' புகழ் நடிகர் செவ்வாழை ராசு உடல் நலக்குறைவால் காலமானார்
|18 May 2023 1:01 PM IST
'பருத்திவீரன்' திரைப்பட புகழ் நடிகர் செவ்வாழை ராசு உடல் நலக்குறைவால் காலமானார்.
மதுரை,
'பருத்திவீரன்' திரைப்பட புகழ் நடிகர் செவ்வாழை ராசு உடல் நலக்குறைவால் காலமானார். மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இன்று காலமானார்.
நடிகர் செவ்வாழை ராசு 'கிழக்குச் சீமையிலே' திரைப்படம் மூலம் இயக்குனர் பாரதிராஜாவால் அறிமுகமானவர். பல திரைப்படங்களில் குணச்சித்திர நடிகராக செவ்வாழை ராசு நடித்துள்ளார்.
இந்த நிலையில் நடிகர் செவ்வாழை ராசுவின் உடல் தேனி மாவட்டம் கோரையூத்து கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட உள்ளது.