< Back
சினிமா செய்திகள்
பார்த்திபனின் 2-ம் பாகம் படம்
சினிமா செய்திகள்

பார்த்திபனின் 2-ம் பாகம் படம்

தினத்தந்தி
|
11 July 2022 5:33 PM IST

புதிய பாதை படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க அவர் தயாராகி வருகிறார் இயக்குனர் பார்த்திபன்.

தமிழில் வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகங்களை எடுக்க இயக்குனர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். ஏற்கனவே ரஜினியின் எந்திரன், கமல்ஹாசனின் விஸ்வரூபம், அஜித்குமாரின் பில்லா, விக்ரமின் சாமி, விஷாலின் சண்டக்கோழி, லாரன்சின் காஞ்சனா உள்ளிட்ட படங்களின் இரண்டாம் பாகங்கள் வந்துள்ளன. சூர்யாவின் சிங்கம் மற்றும் சுந்தர்.சியின் அரண்மனை 3 பாகங்கள் வந்துன. கமலின் இந்தியன் இரண்டாம் பாகம் தயாராகிறது.

இந்த வரிசையில் பார்த்திபன், சீதா ஜோடியாக நடித்து 1989-ல் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிய புதிய பாதை படத்தின் இரண்டாம் பாகம் தயாராக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த ரவுடியை அதே பெண் திருமணம் செய்துகொள்வது போன்ற கதை களத்தில் புதிய பாதை தயாராகி இருந்தது. பார்த்திபனின் திரையுலக வாழ்க்கையில் முக்கிய படமாக இது அமைந்தது. புதிய பாதை படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க அவர் தயாராகி வருகிறார். இதில் நடிக்கும் நடிகர், நடிகைகள் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்