< Back
சினிமா செய்திகள்
குழந்தைகளை மையமாக கொண்ட திரில்லர் படம் - கவனம் ஈர்க்கும் பார்த்திபனின் டீன்ஸ்
சினிமா செய்திகள்

குழந்தைகளை மையமாக கொண்ட திரில்லர் படம் - கவனம் ஈர்க்கும் பார்த்திபனின் டீன்ஸ்

தினத்தந்தி
|
22 Jan 2024 11:14 PM IST

பார்த்திபனின் டீன்ஸ் படம் விரைவில் வெளியாகிறது. இந்த படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார்.

இந்திய சினிமாவில் மூன்று தசாப்தங்களுக்கும் மேல் வெற்றிகரமாக இயங்கி வரும் நடிகர்-இயக்குநர் இராதாகிருஷ்ணன் பார்த்திபன் 'டீன்ஸ்' எனும் முற்றிலும் மாறுபட்ட, குழந்தைகளை மையமாகக் கொண்ட சாகச திரில்லர் திரைப்படத்தை உருவாக்கியுள்ளார்.

கால்டுவெல் வேள்நம்பி, டாக்டர் பாலசுவாமிநாதன், டாக்டர் பின்ச்சி ஸ்ரீநிவாசன் மற்றும் ரஞ்சித் தண்டபாணி ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனர். பயாஸ்கோப் டிரீம்ஸ் எல் எல் பி மற்றும் அகிரா ப்ரொடக்ஷன்ஸ் பேனரில் 'டீன்ஸ்' தயாராகியுள்ளது. கீர்த்தனா பார்த்திபன் அக்கினேனி இதன் கிரியேட்டிவ் தயாரிப்பாளர்.

இந்த திரைப்படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார் . ஒளிப்பதிவு பணிகளை காவ்மிக் ஆரி மேற்கொண்டுள்ளார். இவர்களுடன் இராதாகிருஷ்ணன் பார்த்திபன் முதல் முறையாக இணைந்துள்ளார். இமான் மற்றும் காவ்மிக் ஆரியின் சிறந்த படைப்புகளில் முன்னணி வகிக்கும் வகையில் இந்த படம் உருவாகியுள்ளது. படத்தொகுப்புக்கு ஆர். சுதர்சன் பொறுப்பேற்றுள்ளார்.

இராதாகிருஷ்ணன் பார்த்திபனின் முந்தைய படைப்பான 'இரவின் நிழல்' தேசிய விருது உள்ளிட்ட பல்வேறு அங்கீகாரங்களையும் பெற்று சாதனை படைத்த நிலையில் அவரது புதிய படம் 'டீன்ஸ்' புதிய முத்திரையை பதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்