< Back
சினிமா செய்திகள்
நீ விதைச்ச எல்லாமே முளைக்கும்... பாவம் உட்பட... - வைரலாகும் இரவின் நிழல் டிரைலர்..!
சினிமா செய்திகள்

"நீ விதைச்ச எல்லாமே முளைக்கும்... பாவம் உட்பட..." - வைரலாகும் 'இரவின் நிழல்' டிரைலர்..!

தினத்தந்தி
|
23 May 2022 7:16 PM IST

பார்த்திபன் நடித்துள்ள 'இரவின் நிழல்' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

சென்னை,

நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் நடித்து இயக்கியுள்ள திரைப்படம் 'இரவின் நிழல்'. இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஆர்தர் வில்சன் ஒளிப்பதிவு செய்துள்ளார். அகிரா புரொடக்சன்ஸ் தயாரித்துள்ளது. இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார், ரோபோ ஷங்கர், பிரிகிடா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இரவின் நிழல் திரைப்படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் நேர்க்கோட்டில் அமையாத (Non-Linear) கதையம்சம் கொண்ட திரைப்படம் என்ற பெருமையைக் கொண்டுள்ளது. சமீபத்தில் இந்த திரைப்படத்தின் டீசர் மற்றும் 'மாயவா தூயவா' என்ற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இரவின் நிழல் திரைப்படம் வருகிற ஜூன் 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த டிரைலர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


மேலும் செய்திகள்