ஏனோ தானோ என்று படம் எடுக்க விரும்பவில்லை - பார்த்திபன்
|ஏனோ தானோ என்று படம் எடுக்க விரும்பவில்லை என்று பார்த்திபன் கூறினார்
பார்த்திபன் ஒருவர் மட்டும் நடித்த 'ஒத்த செருப்பு' படம், இந்திய சினிமாவை பிரமிக்க வைத்தது. இந்த சாதனையை அடுத்து 97 நிமிடம் ஓடுகிற 'இரவின் நிழல்' படத்தை ஒரே 'ஷாட்'டில் எடுத்து பார்த்திபன் சாதனை புரிந்து இருக்கிறார்.
இந்தப் படம், 'கேன்ஸ்' பட விழாவில் திரையிடப்பட்டு அனைவரையும் பிரமிக்க வைத்தது. இதுபற்றி பார்த்திபன் கூறுகிறார்:
"கேன்ஸ் விழாவில் படத்தை பார்த்த வெளிநாட்டு நபர்கள் யாராலும் நம்ப முடியவில்லை. இந்தப் படத்தை எப்படி ஒரே ஷாட்டில் எடுத்திருக்க முடியும் என்று ஆச்சரியப்பட்டார்கள். நான் எப்படி படமாக்கினேன் என்று 'மேக்கிங்' படத்தை திரையிட்டு காண்பித்தேன்.
இது, ஒரு முயற்சியே...பெரிய முயற்சி. சிங்கிள் ஷாட்டில் எடுக்கிறது பெரிய விஷயமில்லை. ஒரு மனிதனின் 50 வருட வாழ்க்கையை முன்னும் பின்னுமாக சொல்வது கொஞ்சம் கஷ்டம்தான் ஏ.ஆர்.ரகுமானிடம் நான் கதையை சொன்னபோது அவரால் நம்ப முடியவில்லை. ஒரு சின்ன கேமராவை வைத்து அவர் முன்னால் நடித்துக் காட்டியபின், மிரண்டு போனார்.
32 வருடங்களாக சினிமாவில் இருக்கிறேன். ஏனோதானோ என்று படம் எடுக்க விரும்பவில்லை."