< Back
சினிமா செய்திகள்
புதிய பாதையை ரீமேக் செய்யும் பார்த்திபன்
சினிமா செய்திகள்

புதிய பாதையை ரீமேக் செய்யும் பார்த்திபன்

தினத்தந்தி
|
31 March 2024 2:52 PM IST

புதிய பாதை திரைப்படத்தை ரீமேக் செய்யப்போவதாக நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

பழைய படங்களை மறுவெளியீடு செய்வது டிரண்ட் ஆகி வரும் நிலையில், பழைய படங்களை ரீமேக் செய்யும் முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் தான் இயக்கி, நாயகனாக அறிமுகமான 'புதிய பாதை' திரைப்படத்தை மீண்டும் ரீமேக் செய்து நடிக்கப்போவதாக அறிவித்துள்ளார்.

அழகி திரைப்படம் வெளியாகி 22 ஆண்டுகள் நிறைவு பெற்றதைக் கொண்டாடும் வகையில், அப்படத்தை மறுவெளியீடு செய்துள்ளனர். இதற்கான, விழாவில் பேசிய பார்த்திபன், " நான் இயக்கி நடித்த புதிய பாதை படத்தை மறுவெளியீடு செய்யாமல், நேரடியாக மீண்டும் ரீமேக் செய்யப்போகிறேன். டார்க் வெப் என்கிற பெயரில் இயக்கி, நானே நடிக்கத் திட்டமிட்டிருக்கிறேன். இப்போது, இயக்கி வரும் டீன்ஸ் படத்திற்குப் பின் டார்க் வெப் பணிகளை ஆரம்பிப்பேன்" எனத் தெரிவித்துள்ளார்.


பார்த்திபன் நடித்து இயக்கி 1989-ல் வெளியான 'புதிய பாதை' படம் பெரிய வெற்றி பெற்றது. இதில் நாயகியாக சீதா நடித்து இருந்தார். பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த ரவுடியை அதே பெண் திருமணம் செய்துகொள்வது போன்ற கதைக்களத்தில் தயாராகி இருந்தது. பார்த்திபனின் திரையுலக வாழ்க்கையில் முக்கிய படமாகவும் அமைந்தது.

மேலும் செய்திகள்