தனது அடுத்த படத்திற்கான பணியில் பார்த்திபன் மும்முரம்..!
|இப்படத்தின் பணியில் பார்த்திபன் தீவிரமாக ஈடுப்பட்டுள்ளார்
இயக்குனர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்டுள்ள பார்த்திபன் பல படங்களை இயக்கி மக்கள் மத்தியில் தனக்கான இடத்தை பிடித்தவர். இவர் இயக்கிய ஒத்த செருப்பு திரைப்படம் பல விருதுகளை பெற்று இந்திய திரையுலகின் கவனத்தை ஈர்த்தது. இவர் கடைசியாக இயக்கிய இரவின் நிழல் திரைப்படம், நான் லீனியர் திரைக்கதை முறையில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை பெற்றது.
சில தினங்களுக்கு முன் மணிரத்னம் இயக்கத்தில் பார்த்திபன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த 'பொன்னியின் செல்வன் -2' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சமீபத்தில் இந்த ஆண்டு புதிய படம் இயக்கவுள்ளதாக பார்த்திபன் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், இப்படத்தின் பணியில் பார்த்திபன் தீவிரமாக ஈடுப்பட்டுள்ளார். இது குறித்து அவர் தனது சமூக வலைதளத்தில், படப்பிடிப்பிற்கான இடங்கள் பார்ப்பதாகவும் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என புகைப்படம் ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.
The Hunter….
— Radhakrishnan Parthiban (@rparthiepan) May 11, 2023
Filming locations for the next.
Announcement very soon
Good night to all my friends! pic.twitter.com/NuvnJ5uVZo