விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பார்த்திபன்
|லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் 'லியோ'.
சென்னை,
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். இந்த படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம் கடந்த 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. மேலும், 'லியோ' திரைப்படம் இதுவரை ரூ.500 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், 'லியோ' திரைப்படத்தில் விஜய் நடித்துள்ள பார்த்திபன் கதாபாத்திரத்தின் புகைப்படத்தில் இயக்குனர் பார்த்திபனின் புகைப்படத்தை வைத்து ரசிகர்கள் எடிட் செய்து எக்ஸ் தளத்தில் அவரை டேக் செய்து பதிவிட்டுள்ளனர். இதற்கு பதிலளித்துள்ள பார்த்திபன், 'மிஸ்டர் விஜய் ரசிகர்கள் மன்னிக்க! இப்படியெல்லாம் செய்ய முடியுமான்னு ஆச்சர்யமா இருக்கு!" என்று பதிவிட்டுள்ளார்.