< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
அருள்நிதியின் 2-ம் பாகம் படம்
|30 Dec 2022 3:32 PM IST
அருள்நிதி நடிப்பில் ’டிமாண்டி காலனி' படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது.
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடித்த 'டிமாண்டி காலனி' படம் வித்தியாசமான பேய்க் கதையாக வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்தியது. இந்தப் படம் வெளியாகி 7 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது `டிமாண்டி காலனி' படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது.
இதில் அருள்நிதி நாயகனாகவும் பிரியா பவானி சங்கர் நாயகியாகவும் நடிக்கின்றனர். இந்தப் படத்தை அஜய் ஞானமுத்து டைரக்டு செய்கிறார். படம் பற்றி அவர் கூறும்போது, ``டிமாண்டி காலனி படத்தின் 2-ம் பாகம் படப்பிடிப்பு ஓசூரில் தொடங்கி முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது. 40 சதவீதம் படப்பிடிப்பை முடித்து விட்டோம். இதை முடிக்க உதவிய படக்குழுவினருக்கு நன்றி தெரிவிக்கிறோம். படம் சிறப்பாக வந்துள்ளது'' என்றார். அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இசை: சாம்.சி.எஸ், ஒளிப்பதிவு: தீபக் டி.மேனன்.