பான் வேர்ல்டு ஹிட்... யூடியூபில் 50 கோடி பார்வைகளை கடந்த 'அரபிக்குத்து' வீடியோ பாடல்..!
|விஜய்யின் 'பீஸ்ட்' படத்தில் இடம்பெற்ற 'அரபிக்குத்து' பாடல் வீடியோ யூடியூபில் 50 கோடி பார்வைகளை கடந்துள்ளது.
சென்னை,
நடிகர் விஜய் நடிப்பில், இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான 'பீஸ்ட்' திரைப்படம் கடந்த ஆண்டு ஏப்ரல் 14-ந்தேதி திரையரங்குகளில் வெளியானது. அதிரடி, காமெடி கலந்த இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்திருந்தார். மேலும், யோகி பாபு, செல்வராகவன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்திருந்தனர்.
இந்த படத்துக்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார். பீஸ்ட் படத்தில் இடம் பெற்ற அரபிக்குத்து மற்றும் ஜாலியோ ஜிம்கானா ஆகிய பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன. இதில், அரபிக்குத்து பாடலில் இடம் பெற்ற விஜய்யின் நடனம், காட்சியமைப்பு ஆகியவற்றால் ரசிகர்களிடம் தொடர்ந்து வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் தற்போது அரபிக்குத்து வீடியோ பாடல் யூடியூபில் 50 கோடி (500 மில்லியன்) பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது. இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.