இந்திய சினிமா தயாரிப்பாளர் - டைரக்டர் பாலியல் வன்கொடுமை செய்ததாக பாகிஸ்தான் நடிகை குற்றச்சாட்டு
|இந்திய சினிமா தயாரிப்பாளர் -பாகிஸ்தான் டைரக்டர் பாலியல் வன்கொடுமை செய்ததாக பாகிஸ்தான் நடிகை குற்றம் சாட்டியுள்ளார்.
இஸ்லாமாபாத்
பாகிஸ்தான் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை மெஹ்ரீன் ஷா, ஒரு படத்தின் படப்பிடிப்பின் போது இந்திய சினிமா தயாரிப்பாளர் ராஜ் குப்தா மற்றும் பாகிஸ்தான் டைரகடர் சையத் எஹ்சான் அலி ஜைதி ஆகியோரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.
அஜர்பைஜானின் பாகுவில் ஒரு படத்தின் படப்பிடிப்பின் போது தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக மெஹ்ரீன் குற்றம் சாட்டியுள்ளார்.
இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ மூலம் இந்த அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டு உள்ளார்.
வீடியோவில் தனது அனுபவத்தை விவரித்த மெஹ்ரீன் கூறியதாவது:-
நான் அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் ராஜ் குப்தாவும், இஷான் அலியுடன் படப்பிடிப்பு தொடர்பாக சென்றிருந்தேன். அங்கு வந்தவுடன் இருவரின் நடத்தையும் முற்றிலும் மாறியது.
ராஜ் குப்தாவும், இஷான் அலியுடன் பணிபுரிவது எனக்கு ஒரு கனவாக இருந்தது. அவர்கள் இங்கு வேலை செய்ய வந்தார்களா அல்லது அவர்களுக்கு வேறு ஏதேனும் உள்நோக்கம் உள்ளதா என்பது கூட எனக்குத் தெரியாது.
தயாரிப்பாளர் மற்றும் டைரக்டர் பாலியல் தொழிலாளர்களை ஓட்டலுக்கு அழைத்ததாக மேலும் குற்றம் சாட்டினார்.
ராஜ் குப்தாவும், இஷான் அலியும் மோசமான கோரிக்கைகளுக்கு இணங்க மறுத்ததால் தான் துன்புறுத்தப்பட்டதாக மெஹ்ரீன் கூறினார்.'பெண்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதுதான் இதையெல்லாம் சொல்வதன் நோக்கம். மற்ற நடிகர்களை எச்சரிக்க விரும்பியதால் இப்போது இந்த வீடியோவை வெளியிட்டு உள்ளதாக கூறி உள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது:
தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரின் கோரிக்கையை ஏற்காததால் தண்டனையாக பட்டினி கிடக்க வேண்டியதாக இருந்தது. தனக்கு உடல்நிலை சரியில்லாமல் போன பிறகு படக்குழு உறுப்பினர் ஒருவரிடமிருந்து நிறைய உதவிகளைப் பெற்றேன் என கூறினார்.