சினிமா செய்திகள்
பா.ரஞ்சித் தயாரிக்கும் புதிய திரைப்படம் பாட்டல் ராதா... பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
சினிமா செய்திகள்

பா.ரஞ்சித் தயாரிக்கும் புதிய திரைப்படம் 'பாட்டல் ராதா'... பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

தினத்தந்தி
|
24 Jun 2024 8:05 PM IST

பா.ரஞ்சித் தயாரிப்பில் தினகரன் சிவலிங்கம் இயக்கும் புதிய படத்துக்கு 'பாட்டல் ராதா' என்று பெயரிடப்பட்டுள்ளது.

சென்னை,

'அட்டகத்தி', 'மெட்ராஸ்' திரைப்படங்கள் மூலம் கவனம் ஈர்த்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து 'கபாலி', 'காலா' ஆகிய படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக உயர்ந்தவர் பா.ரஞ்சித். தற்போது அவர் நடிகர் விக்ரம் நடிப்பில் 'தங்கலான்' படத்தை இயக்கியுள்ளார். கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் பட்ட துயரத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இயக்குனராக மட்டுமின்றி நீலம் புரொடக்சன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி சமூக அக்கறை கொண்ட திரைப்படங்களையும் பா.ரஞ்சித் தயாரித்து வருகிறார். இதுவரை நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம், 'பரியேறும் பெருமாள்', 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு', 'ரைட்டர்', 'புளூ ஸ்டார்', 'ஜே பேபி' உள்ளிட்ட படங்களை அவர் தயாரித்துள்ளார்.

இந்த நிலையில் பா.ரஞ்சித் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. தினகரன் சிவலிங்கம் இயக்கும் இந்த படத்துக்கு 'பாட்டல் ராதா' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் குரு சோமசுந்தரம், சஞ்சனா நடராஜன், ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். இந்த பர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்