கனவு படத்தை இயக்குகிறார், பா.ரஞ்சித்
|பா.ரஞ்சித் ஏற்கனவே ‘ஜெர்மன்' என்ற தனது கனவு படத்தை விரைவில் எடுக்கப் போவதாக கூறியிருந்தார். இதற்கிடையில் படம் பற்றி சில தகவல்கள் சமூக வலைதளத்தில் பரவத் தொடங்கியுள்ளன.
'அட்டகத்தி', 'மெட்ராஸ்', 'கபாலி', 'காலா', 'சார்பட்டா பரம்பரை' போன்ற வித்தியாசமான படங்களை எடுத்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர், இயக்குனர் பா.ரஞ்சித். இவரது இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'நட்சத்திரம் நகர்கிறது' படமும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.
பா.ரஞ்சித் தற்போது இயக்கி வரும் புதிய படத்தில் விக்ரம் கதாநாயகனாக நடிக்கிறார். இது விக்ரமுக்கு 61-வது படம் ஆகும். சர்வதேச கடத்தல் சம்பவங்களின் பின்னணி கொண்ட படமாக இந்தப் படம் தயாராவதாக கூறப்படுகிறது.
பா.ரஞ்சித் ஏற்கனவே 'ஜெர்மன்' என்ற தனது கனவு படத்தை விரைவில் எடுக்கப் போவதாக கூறியிருந்தார். இதற்கிடையில் 'ஜெர்மன்' படம் பற்றி சில தகவல்கள் சமூக வலைதளத்தில் பரவத் தொடங்கியுள்ளன. 'கேங்ஸ்டர்' பட பாணியில் இந்தப் படம் இருக்கப் போகிறது என்றும் தகவல்கள் வெளியானது.
இந்தத் தகவலை பா.ரஞ்சித் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "தற்போது 'ஜெர்மன்' படம் குறித்து பரவி வரும் கதை உண்மையில்லை. அது எதிர்காலம் சார்ந்த படமாக இருக்கும். சூர்யாவிடம் அந்தக் கதையை சொல்லிவிட்டேன். இந்த காலகட்டத்துக்கு ஏற்றார்போல அதில் சில மாற்றங்கள் செய்ய இருக்கிறேன். அது ஒரு மிகப்பெரிய படமாக இருக்கும்" என்றார்.