'நட்சத்திரம் நகர்கிறது' படத்திற்கு 'ஏ' சான்றிதழ்..!
|"நட்சத்திரம் நகர்கிறது" திரைப்படத்திற்கு தணிக்கைக் குழு 'ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது.
சென்னை,
இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான 'சார்பட்டா பரம்பரை' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக பா.ரஞ்சித் ஒரு முழுநீள காதல் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்திற்கு 'நட்சத்திரம் நகர்கிறது' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் துஷாரா விஜயன் மற்றும் காளிதாஸ் ஜெயராம் முண்ணனி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மேலும் கலையரசன், ஹரிகிருஷ்ணன், சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் 'டான்ஸிங் ரோஸ்' கதாபாத்திரத்தில் நடித்த ஷபீர் உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர். நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்துக்கு இசையமைப்பாளர் தென்மா இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, "நட்சத்திரம் நகர்கிறது" திரைப்படத்திற்கு தணிக்கைக் குழு 'ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. 'நட்சத்திரம் நகர்கிறது' திரைப்படம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.