வதந்தியால் ஓவியா வருத்தம்
|தமிழில் 2010-ல் வெளியான களவாணி படத்தில் அறிமுகமான ஓவியாவுக்கு தொடர்ந்து படங்கள் குவிந்தன. மலையாள படங்களிலும் நடித்து இருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றும் பிரபலமானார். இந்த நிகழ்ச்சியில் நடிகர் ஆரவ்வை ஒருதலையாக காதலித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பானது. அடுத்த பிக்பாஸ் சீசனிலும் ஓவியா கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக தகவல் பரவி உள்ளது.
இந்த நிலையில் ஓவியா அளித்துள்ள பேட்டியில், "நான் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதற்கான காரணம் பற்றி நிறைய தவறான தகவல்கள் பரவுகின்றன. நடிகைகள் என்றால் இதுபோன்ற வதந்திகள் வரத்தான் செய்கின்றன. அவற்றை பொருட்படுத்தவோ கண்டு கொள்ளவோ கூடாது.
பொது இடங்களில் நடிகைகளை சிலர் தவறாக தொடுகின்றனர். அவர்கள் சரியாக வளர்க்கப்படவில்லை என்றுதான் அர்த்தம். என்னை விரும்பாதவர்கள் பக்கத்தில் இருக்க மாட்டேன். உண்மை பேசாதவர்களை எளிதில் கண்டு பிடித்து விடுவேன். எனக்கு ஆசைகள் இல்லை. அதனால் மகிழ்ச்சியாக இருக்கிறேன்'' என்றார்.