'யாத்திசை' திரைப்படத்தின் ஓ.டி.டி. ரிலீஸ் தேதி அறிவிப்பு
|'யாத்திசை' திரைப்படத்தின் ஓ.டி.டி. ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை,
தரணி ராசேந்திரன் இயக்கத்தில் சக்தி மித்ரன், செயோன், ராஜலட்சுமி, குரு சோமசுந்தரம், சந்திரகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ள 'யாத்திசை' திரைப்படம், கடந்த ஏப்ரல் 21-ந்தேதி திரையரங்குகளில் வெளியானது. ஏழாம் நூற்றாண்டில் பாண்டிய மன்னனுக்கெதிராக போராடிய ஒரு சிறு தொல்குடியை பற்றிய கதையாக உருவாகி இருந்த 'யாத்திசை' திரைப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இப்படம் குறித்து பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்தனர். இந்நிலையில், 'யாத்திசை' திரைப்படத்தின் ஓ.டி.டி. ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற 12-ந்தேதி அமேசான் பிரைம் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
an epic tale of struggle for freedom coming your way #YaathisaiOnPrime, May 12 pic.twitter.com/ErEG47xVei
— prime video IN (@PrimeVideoIN) May 10, 2023 ">Also Read: