< Back
சினிமா செய்திகள்
கருடன்  திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் தேதி அறிவிப்பு
சினிமா செய்திகள்

'கருடன்' திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் தேதி அறிவிப்பு

தினத்தந்தி
|
2 July 2024 6:07 PM IST

'கருடன்' திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றிப் பெற்றதுடன், நல்ல விமர்சனத்தையும் பெற்றது.

சென்னை,

எதிர் நீச்சல்', 'காக்கிச் சட்டை', 'கொடி', 'பட்டாசு' படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி நடித்துள்ள படம் 'கருடன்'. இப்படத்தில் சசிகுமார், உன்னி முகுந்தன், ஷிவதா, ரோஷினி ஹரிபிரியன், சமுத்திரக்கனி, மைம் கோபி, ஆர்.வி.உதயகுமார், வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கடந்த மே 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக படத்தில் சூரியின் நடிப்பு பாராட்டப்பட்டது. வெற்றிமாறன் கதை எழுதியுள்ளார். இப்படம் வசூல் ரீதியாக வெற்றிப் பெற்றதுடன், நல்ல விமர்சனத்தையும் பெற்றது.

.இந்நிலையில், 'கருடன்' திரைப்படம் நாளை அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், படத்தை சிம்ப்ளி சவுத் (Simply South) ஓடிடி தளத்திலும் காண முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் செய்திகள்