< Back
சினிமா செய்திகள்
பிரேமலு படத்தின் ஓ.டி.டி. அப்டேட் வெளியானது
சினிமா செய்திகள்

பிரேமலு படத்தின் ஓ.டி.டி. அப்டேட் வெளியானது

தினத்தந்தி
|
9 April 2024 10:16 PM IST

தமிழ் மொழி மட்டுமின்றி மலையாளம் மற்றும் இந்தி மொழிகளிலும் இந்த படம் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது

சென்னை,

.இயக்குனர் கிரிஷ் ஏ.டி. இயக்கத்தில் உருவான 'பிரேமலு' படத்தில், நஸ்லென் மற்றும் மமிதா பைஜூ ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். கிரீஷ் மற்றும் கிரண் ஜோசி இணைந்து எழுதியுள்ள இப்படத்திற்கு அஜ்மல் சாபு ஒளிப்பதிவு செய்துள்ளார். விஷ்ணு விஜய் இசையமைக்க, ஆகாஷ் ஜோசப் வர்கீஸ் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். பாவனா ஸ்டுடியோஸ் சார்பில் ஃபஹத் பாசில், திலீஷ் போத்தன், சியாம் புஷ்கரன் ஆகியோர் இப்படத்தைத் தயாரித்துள்ளனர்.இந்த திரைப்படம் தென்னிந்தியா முழுவதும் பெரும் வரவேற்பை பெற்று வசூலை குவித்தது.

இந்த நிலையில் பிளாக்பஸ்டர் திரைப்படமான "பிரேமலு" வரும் 12ம் தேதி டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ் மொழி மட்டுமின்றி மலையாளம் மற்றும் இந்தி மொழிகளிலும் இந்த படம் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது

மேலும் செய்திகள்