இயக்குனர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் ஓ.டி.டி. தளங்கள் - டைரக்டர் விஜய்
|ஓ.டி.டி டிஜிட்டல் தளங்கள் இயக்குனர்களுக்கு சிறந்த தடம் அமைத்து கொடுத்துள்ளது. சுதந்திரமாக திறமைகளை வெளிப்படுத்த முடியும் என டைரக்டர் விஜய் தெரிவித்துள்ளார்.
தமிழில் வெற்றி படங்கள் கொடுத்து முன்னணி டைரக்டராக வலம் வரும் விஜய் தற்போது பிரசன்னா, மிருதுளா ஸ்ரீதரன் ஆகியோருடன் இணைந்து 'பைவ் சிக்ஸ் செவன் எய்ட்' என்ற ஓ.டி.டி. தளத்துக்கான படத்தை இயக்கி உள்ளார். இதுகுறித்து விஜய் கூறும்போது. ''டிஜிட்டல் தளங்கள் இயக்குனர்களுக்கு சாதகமாக உள்ளன. சினிமாவில் 2 மணி நேரம் மட்டுமே சொல்ல முடிவதை ஓ.டி.டியில் 4 மணிநேரம் விரிவாக சொல்ல முடியும். வெப் தொடர்கள் அதிகம் வருகின்றன. ஓ.டி.டி டிஜிட்டல் தளங்கள் இயக்குனர்களுக்கு சிறந்த தடம் அமைத்து கொடுத்துள்ளது. சுதந்திரமாக திறமைகளை வெளிப்படுத்த முடியும். ஆனாலும் சினிமா அனுபவம் அற்புதமானது. நாங்கள் இயக்கி உள்ள 'பைவ் சிக்ஸ் செவன் எய்ட்' படம் 'டீன் ஏஜ்' டான்சர்கள் நடித்து ஓ.டி.டி.யில் வரும் முதல் இந்திய நடன படம். திறமையான இளம் நடன கலைஞர்கள் 80 நாட்கள் பயிற்சி எடுத்து நடித்து உள்ளனர். இளைஞர்களை பெரிய அளவில் கவரும், தெருவில் ஆடும் ஏழை இளைஞர்களுக்கும் வசதியான வீட்டு பசங்களுக்கும் நடக்கும் நடன போட்டியே கதை தித்யா சாகர் பாண்டே, நாகேந்திரபிரசாத், சின்னி பிரகாஷ், விவேக் ஜோக்தனே உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்'' என்றார்.