ஆஸ்கர் விருது விழா; அமெரிக்காவில் குவியும் திரைப்பிரபலங்கள்
|ஆஸ்கர் விருது வழங்கும் விழா இந்திய நேரப்படி நாளை அதிகாலை தொடங்குகிறது.
வாஷிங்டன்,
திரைத்துறையில் உலக அளவில் உயரிய விருதாக ஆஸ்கர் உள்ளது. 1929ம் ஆண்டு முதல் ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. சிறந்த திரைப்படம், நடிகர், நடிகை, டைரக்டர், இசையமைப்பாளர் உள்பட பல்வேறு பிரிவுகளில் ஆஸ்கர் விருது வழங்கப்படுகிறது.
இந்நிலையில், 96வது ஆஸ்கர் விருது நிகழ்ச்சி அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் பெவிலி ஹில்ஸ் நகரில் உள்ள டொல்பி திரையரங்கில் இந்திய நேரப்படி நாளை அதிகாலை நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி நாளை அதிகாலை 4.30 மணிக்கு ஆஸ்கர் விருது நிகழ்ச்சி தொடங்குகிறது. இதற்காக திரைப்பிரபலங்கள் கலிபோர்னியாவில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
ஆஸ்கர் விருது நிகழ்ச்சியில் சிறந்த திரைப்படம், சிறந்த டைரக்டர் உள்பட பல்வேறு பிரிவுகளில் கிறிஸ்டோபர் நோலனின் ஓப்பன்ஹெய்மர் திரைப்படம் அதிக ஆஸ்கர் விருதுகளை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்கர் விருது நிகழ்ச்சி டிஸ்னி பிளஸ் காட்ஸ்டாரில் ஒளிபரப்பாக உள்ளது.