< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
ஆஸ்கர் விருது வென்ற பிரபல ஹாலிவுட் டைரக்டர் மரணம்
|9 Aug 2023 11:13 AM IST
'தி எக்ஸார்சிஸ்ட்' வெற்றிப் படத்தை இயக்கிய பிரபல ஹாலிவுட் டைரக்டர் வில்லியம் பிரைட்கின். இவர் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள அவரது இல்லத்தில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 87.
இதுகுறித்து வில்லியம் பிரைட்கின் மனைவி ஷெர்ரி லான்சிங் கூறும்போது, "எனது கணவர் அற்புதமான மனிதர். சிறந்த வாழ்க்கை வாழ்ந்தார். அவர் உலகின் சிறந்த கணவர், அற்புதமான தந்தை, நிறைவேறாத கனவு எதுவும் அவருக்கு இல்லை. அவரது புதிய படம் ஒன்று திரைக்கு வர உள்ளது'' என்றார்.
உலக அளவில் பேய் படங்களில் தனி முத்திரை பதித்தது 'எக்ஸார்சிஸ்ட்'. இதனால் டைரக்டர் வில்லியம் பிரைட்கின் புகழின் உச்சிக்கு சென்றார். இவர் இயக்கிய 'தி பிரெஞ்ச் கனெக்சன்' என்ற படம் ஆஸ்கர் விருதை பெற்று கொடுத்தது. வில்லியம் பிரைட்கின் மறைவுக்கு ஹாலிவுட் நடிகர்-நடிகைகள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.