சிறந்த திரைப்படம் உள்பட 7 ஆஸ்கர் விருதுகளை அள்ளிக்குவித்த 'எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்' திரைப்படம்...!
|95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா இன்று நடைபெற்றது.
வாஷிங்டன்,
Live Updates
- 13 March 2023 9:40 AM IST
டேனியல் கிவான் (Daniel Kwan) மற்றும் டேனியல் ஸ்கினெர்ட் (Daniel Scheinert) இயக்கத்தில் வெளியான ‘எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்’ (Everything Everywhere All At Once) திரைப்படம் 7 ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது.
சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர், சிறந்த திரைக்கதை, சிறந்த படத்தொகுப்பு, சிறந்த நடிகை, சிறந்த துணை நடிகை, சிறந்த துணை நடிகர் ஆகிய 7 பிரிவுகளில் ‘எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்’ திரைப்படம் ஆஸ்கர் விருது வென்றுள்ளது.
- 13 March 2023 9:30 AM IST
சிறந்த திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ் (Everything Everywhere All At Once) திரைப்படம் வென்றது.
- 13 March 2023 9:27 AM IST
சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ் (Everything Everywhere All At Once) திரைப்படத்திற்காக மிஷெல் யோஹ் (Michelle Yeoh) வென்றார்.
- 13 March 2023 9:04 AM IST
சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை தி வேல்ஸ் (The Whale) திரைப்படத்திற்காக பிரெண்டன் பிரசர் (Brendan Fraser) வென்றார்.
- 13 March 2023 9:00 AM IST
சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கர் விருதை எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ் (Everything Everywhere All At Once) திரைப்படத்திற்காக இயக்குனர்கள் டேனியல் கிவான் (Daniel Kwan) மற்றும் டேனியல் ஸ்கினெர்ட் (Daniel Scheinert) வென்றனர்.
- 13 March 2023 8:53 AM IST
சிறந்த படத்தொகுப்பிற்கான ஆஸ்கர் விருதை எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ் (Everything Everywhere All At Once) திரைப்படத்திற்காக பால் ரோஜர்ஸ் வென்றார்.
- 13 March 2023 8:48 AM IST
சிறந்த ஒலிப்பதிவுக்கான (Sound) ஆஸ்கர் விருதை டாப் கன்: மேவ்ரிக் (Top Gun: Maverick) திரைப்படம் வென்றது. ஆஸ்கர் விருதை அத்திரைப்படத்தின் ஒலிப்பதிவு எடிட்டர் அல் நெல்சன் வென்றார்.
- 13 March 2023 8:44 AM IST
சிறந்த தழுவிய திரைக்கதைக்கான (Adapted Screenplay) ஆஸ்கர் விருதை விமன்ஸ் டாக்கிங் (Women Talking) திரைப்படத்திற்காக சாரா பொலி (Sarah Polley) வென்றார்.
- 13 March 2023 8:31 AM IST
ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது.
கீரவாணி இசையில் உருவான நாட்டு நாட்டு பாடல் ஏற்கனவே கோல்டன் குளோப் விருதை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- 13 March 2023 8:25 AM IST
சிறந்த திரைக்கதைக்கான (Writing (Original Screenplay)) ஆஸ்கர் விருதை ஆல் குயிண்ட் ‘எவ்ரி திங்க் எவ்ரி வேர் ஆல் அட் ஒன்ஸ்’ (Everything Everywhere All at Once) திரைப்படத்திற்காக எழுத்தாளர்கள் டேனியல் கிவான் மற்றும் டேனியல் ஸ்கினெர்ட் வென்றனர்