அசைவம் சாப்பிட்டு கிருஷ்ணராக நடிக்கும் பிரபாசுக்கு எதிர்ப்பு
|'கல்கி 2898 ஏடி' என்ற படத்தில் கிருஷ்ணர் வேடத்தில் பிரபாஸ் நடிப்பதாக கூறப்படுகிறது.
மும்பை,
பிரபாஸ் படப்பிடிப்பு தளத்தில் அசைவம் சாப்பிட்டு கடவுள் கிருஷ்ணரை அவமதித்து வருவதாக எதிர்ப்பு கிளம்பி உள்ளது. 'பாகுபலி' படத்துக்கு பிறகு 'பான் இந்தியா' நடிகராக உயர்ந்துள்ள பிரபாஸ் நடிப்பில் அடுத்தடுத்து வெளியான 'ராதே ஷியாம்', 'சலார்', 'ஆதிபுருஷ்' ஆகிய படங்கள் தோல்வி அடைந்த நிலையில் தற்போது 'கல்கி 2898 ஏடி' என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் மற்றும் ஆங்கில மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. கிருஷ்ணரின் பத்தாவது அவதாரமான 'கல்கி' அவதாரத்தை மையமாக வைத்து இந்த படம் தயாராவதாகவும், இதில் கிருஷ்ணர் வேடத்தில் பிரபாஸ் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் 'கல்கி' படப்பிடிப்பு தளத்தில் பிரபாஸ் அசைவம் சாப்பிடுகிறார் என்றும், கடவுள் கிருஷ்ணராக நடித்துக்கொண்டு தினமும் இப்படி அசைவம் சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறார் என்றும், அவர் அசைவம் சாப்பிடக்கூடாது என்றும் இந்தி விமர்சகர் ஒருவர் பதிவு வெளியிட்டார்.
இந்த தகவல் வைரலாகி பிரபாஸ் அசைவம் சாப்பிட்டுக்கொண்டே கடவுள் கிருஷ்ணராக நடிக்கிறாரா? இது கிருஷ்ணரை அவமதிக்கும் செயல் என்று பலரும் வலைதளத்தில் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.