< Back
சினிமா செய்திகள்
பிரபல நடிகரின் 4-வது திருமணத்துக்கு எதிர்ப்பு... விவாகரத்தான நடிகையுடன் காதல்
சினிமா செய்திகள்

பிரபல நடிகரின் 4-வது திருமணத்துக்கு எதிர்ப்பு... விவாகரத்தான நடிகையுடன் காதல்

தினத்தந்தி
|
8 Jan 2023 8:44 AM IST

கன்னட நடிகையான பவித்ரா லோகேஷ் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்ற நிலையில் தெலுங்கு நடிகர் நரேஷ் என்பவருடன் காதல் வயப்பட்டார்.

தமிழில் கவுரவம், அயோக்யா, க.பெ.ரணசிங்கம், கூகுள் குட்டப்பா, வீட்ல விசேஷம் ஆகிய படங்களில் நடித்துள்ள கன்னட நடிகையான பவித்ரா லோகேஷ் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்ற நிலையில் தெலுங்கு நடிகர் நரேஷ் என்பவருடன் காதல் வயப்பட்டார். இருவரும் ஜோடியாக சுற்றினார்கள். 60 வயதாகும் நரேஷ் ஏற்கனவே 3 பெண்களை திருமணம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் மைசூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் ஒரே அறையில் நரேசும் பவித்ராவும் தங்கி இருந்தபோது நரேசின் 3-வது மனைவி ரம்யா ஓட்டலுக்கு சென்று இருவரிடம் சண்டை போட்டார். பவித்ராவை செருப்பால் அடிக்கவும் பாய்ந்தார். இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. பணத்துக்கு ஆசைப்பட்டு எனது கணவரை என்னிடம் இருந்து பவித்ரா பிரித்து விட்டார் என்றும் ரம்யா குற்றம் சாட்டி இருந்தார். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு நரேசும் பவித்ராவும் உதட்டோடு உதடு முத்தமிடும் வீடியோவை வெளியிட்டு விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவித்தனர். இந்த திருமணத்துக்கு நரேசின் மூன்றாவது மனைவி எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். நரேஷ் இன்னொரு திருமணம் செய்து கொள்வதற்கு நான் விட மாட்டேன். எனது மகனுக்கு தந்தையாகவே அவர் இருக்க வேண்டும்'' என்றார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்