< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் பணிபுரிய வாய்ப்பு
|17 Sept 2022 3:15 PM IST
கோவை மாநகர காவல்துறை மற்றும் டெக்ஸிட்டி யுவா இந்தியா என்ற அமைப்பினர் சார்பில் குறும்பட போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை,
கோவை மாநகர காவல்துறை மற்றும் டெக்ஸிட்டி யுவா இந்தியா என்ற அமைப்பினர் சார்பில் குறும்பட போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.
'போதை தடுப்பு விழிப்புணர்வு' என்ற தலைப்பில், மூன்று முதல் ஐந்து நிமிடங்கள் வரையிலான குறும்படத்தை, அக்டோபர் 20 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த போட்டியில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் மட்டும் பங்கு பெறலாம் எனவும், வெற்றி பெறுவோருக்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் உதவி இயக்குனராக பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.