< Back
சினிமா செய்திகள்
யாரப்பா இதை செய்தது...? ஆடை அணிந்திருந்தேன் யாரோ மார்பிங் செய்து விட்டார்கள்- ரன்வீர் சிங்
சினிமா செய்திகள்

யாரப்பா இதை செய்தது...? ஆடை அணிந்திருந்தேன் யாரோ மார்பிங் செய்து விட்டார்கள்- ரன்வீர் சிங்

தினத்தந்தி
|
15 Sept 2022 1:42 PM IST

நிர்வாண புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியானா விவகாரத்தில், பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் விளக்கம் அளித்துள்ளார்.

மும்பை

கடந்த சில நாட்களுக்கு முன்பு, ரன்வீர் ஒரு பத்திரிகைக்காக நிர்வாண புகைப்படம் எடுத்தார். ரன்வீரின் போட்டோ ஷூட் படங்கள் ஜூலை 21 அன்று ஆன்லைனில் வெளியிடப்பட்டன. இவரின் இந்த புகைப்படங்கள் வைரலாக பரவியது.

தனது நிர்வாண படங்களின் மூலம் ரன்வீர் பெண்களின் உணர்வுகளை புண்படுத்தியதாகக் கூறி, ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் அதிகாரி செம்பூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். ஜூலை 26-ம் தேதி ரன்வீர் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.

நிர்வாண புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியானா விவகாரத்தில், தனது போட்டோ மார்பிங் செய்யப்பட்டுள்ளதாக பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் விளக்கம் அளித்துள்ளார்.

அதில் நான் அந்த புகைப்படத்தை வெளியிடவில்லை. தனது புகைப்படம் நிர்வாணமாக இருப்பது போல் மார்பிங் செய்யபட்டுள்ளதாக ரன்வீர் சிங் கூறியதாக செம்பூர் போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்