< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
அந்த மாதிரியான ஒரு வாய்ப்புதான் ஷாருக்கான் படத்துல கிடைச்சுருக்கு - மனம் திறந்த யோகிபாபு
|6 Nov 2022 10:42 AM IST
திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடிகர் யோகி பாபு இன்று காலை சாமிதரிசனம் செய்தார்.
திருச்செந்தூர்,
நகைச்சுவை நடிகராக கொடி கட்டி பறக்கும் யோகிபாபு கதாநாயகனாகவும் நடிக்கிறார். அடுத்து சிம்புத்தேவன் இயக்கும் சரித்திர கதையம்சம் உள்ள படத்தில் யோகிபாபு நடிப்பது உறுதியாகி உள்ளது. இந்த நிலையில் திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடிகர் யோகிபாபு சாமிதரிசனம் செய்ய இன்று காலை வந்தார்.
அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், என் முகத்துக்கு தகுந்த மாதிரியான கதாபாத்திரத்துல தான் நான் நடிக்க முடியும், இப்போவும் அந்த மாதிரியான ஒரு வாய்ப்புதான் ஷாருக்கான் படத்துல கிடைச்சுருக்கு என்று தெரிவித்தார்.