"ஒருவரை விமர்சிப்பதற்கும் அறம் தெரிந்திருக்க வேண்டும்" - பருத்திவீரன் சர்ச்சை ஞானவேல் ராஜாவுக்கு பதிலடி கொடுத்த சினேகன்
|ஞானவேல் ராஜா, இயக்குனர் அமீர் இடையேயான விவகாரம் தற்போது சமூக வலைதளத்தில் பேசுபொருளாகி உள்ளது
சென்னை,
பருத்தி வீரன்' படத்தின்போது நடந்த பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக இயக்குனர் அமீர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இடையேயான கருத்து பரிமாற்றம் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி இருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு ஆதரவாக திரைத்துறையை சேர்ந்த சிலரும், இயக்குனர் அமீருக்கு ஆதரவாக சிலரும் தங்களின் கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இயக்குனர் அமீருக்கு பாடலாசிரியர் சினேகன் ஆதரவு தெரிவித்துள்ளார். இது குறித்து சினேகன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில், "நான் இயக்குனர் அமீரோடு அவரின் முதல் படத்தில் இருந்து இன்று வரை தொடர்ந்து பணியாற்றி வருகிறேன். அவரின் நேர்மையை எடைப்போட்டு பார்க்கும் தகுதி எவருக்கும் இல்லை. பருத்தி வீரன் படத்தை முடிப்பதற்கு அவர் எவ்வளவு சிரமத்திற்கு உள்ளானார் என்பது அவரோடு கூட பயணித்த என்னைப் போன்றவர்களுக்குதான் தெரியும். ஒருவரை விமர்சிப்பதற்கும் அறம் தெரிந்திருக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.