பிறந்தநாளை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை ரோஜா சாமி தரிசனம்..!
|பிறந்தநாளை முன்னிட்டு இன்று காலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை ரோஜா சாமி தரிசனம் செய்தார்.
திருப்பதி,
தற்போதைய ஆந்திர சுற்றுலாத்துறை மந்திரியும் நடிகையுமான ரோஜா இன்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த நிலையில் தன்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு இன்று காலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை ரோஜா சாமி தரிசனம் செய்தார்.
அவருக்கு தேவஸ்தானம் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ஏழுமலையானை எத்தனை முறை வழிபட்டாலும் ஆசை தீராது என்றும், மீண்டும், மீண்டும் மக்களுக்கு சேவை செய்ய வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று இறைவனிடம் வேண்டிக் கொண்டதாகவும் தெரிவித்தார்.
மேலும் தன்னுடைய மகன், மகள் ஆகியோர் விருப்பப்பட்டு நடிப்புத் தொழிலுக்கு வந்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன் என்றும் நடிகை ரோஜா தெரிவித்தார். சாமி தரிசனம் செய்ய வந்த ரோஜாவுக்கு தேவஸ்தான அதிகாரிகள், கோவில் ஊழியர்கள், கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.