100வது நாள் வெற்றியில் 'லவ் டுடே திரைப்படம்
|சென்னையில் உள்ள சில திரையரங்குகளில் லவ் டுடே திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
சென்னை,
ஜெயம் ரவி நடிப்பில் 2019-ஆம் ஆண்டு வெளியான கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். தற்போது இவர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'லவ் டுடே'. இப்படத்தை ஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்தது. பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் சத்யராஜ், ராதிகா, யோகி பாபு, ரவீனா மற்றும் ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இப்படம் கடந்த நவம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது.
கடந்த 2022-ஆம் ஆண்டு நவம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான லவ் டுடே திரைப்படம் வெளியாகி இன்றுடன் 100 நாட்கள் ஆகியுள்ளது. சென்னையில் உள்ள சில திரையரங்குகளில் லவ் டுடே திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
அதன்படி லவ் டுடே 100வது நாள் என்பதால் இயக்குனர் தனது பிரதீப் தனது டுவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்து போஸ்டர் வெளியிட்டுள்ளார். தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்
100 Days in theatres
— Pradeep Ranganathan (@pradeeponelife) February 11, 2023
Thankyou all :)
Thankyou AGS Aghoram sir @archanakalpathi @aishkalpathi @thisisysr
Thankyou my whole team ❤️ pic.twitter.com/AhBxlnMSZw