< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
அக்ஷய் குமார் நடித்த 'ஓ.எம்.ஜி. 2' படம் ரூ.100 கோடி வசூல்..!!!
|20 Aug 2023 1:35 PM IST
அக்ஷய் குமார் நடிப்பில் வெளியான 'ஓ.எம்.ஜி. 2' படம், உள்நாட்டில் ரூ.100 கோடி வசூலித்துள்ளது.
மும்பை,
இந்தி திரையுலகில் முன்னணி கதாநாயகனாக இருக்கும் அக்ஷய் குமார், தமிழில் ரஜினிகாந்தின் 2.0 படத்தில் வில்லனாக நடித்து இருந்தார். தற்போது அக்ஷய் குமார் நடிப்பில் 'ஓ.எம்.ஜி. 2' படம் தயாராகி திரைக்கு வந்துள்ளது.
பாலியல் கல்வியை போதிக்கும் கதையம்சம் கொண்ட இந்த படத்தில் இந்து கடவுள்களுக்கு எதிரான சர்ச்சை காட்சிகள் இருப்பதாகவும், படத்தை திரையிட அனுமதிக்க கூடாது என்றும் எதிர்ப்புகள் கிளம்பின. இந்தப் படத்துக்கு தணிக்கை குழுவினர் ஏ சான்றிதழ் அளித்தனர்.
கடந்த 11-தேதி வெளியான 'ஓ.எம்.ஜி. 2' படம், உள்நாட்டில் இதுவரை ரூ.101.61 கோடி வசூலித்து உள்ளதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகி உள்ளது.