< Back
சினிமா செய்திகள்
அரவிந்த் சாமி நடிக்கும் கள்ளபார்ட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!
சினிமா செய்திகள்

அரவிந்த் சாமி நடிக்கும் 'கள்ளபார்ட்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

தினத்தந்தி
|
2 Jun 2022 4:32 PM GMT

நடிகர் அரவிந்த் சாமி நடித்துள்ள 'கள்ளபார்ட்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

இயக்குனர் ராஜபாண்டி இயக்கத்தில் கதாநாயகனாக நடிகர் அரவிந்த் சாமி கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'கள்ளபார்ட்'. இந்த படத்தில் ரெஜினா கேசன்ட்ரா, ஆனந்த்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் பாரதி, ஆதேஷ் பாலா, பேபி மோனிகா, ஹரிஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இந்த நிலையில், 'கள்ளபார்ட்' படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இப்படம் வருகிற ஜூன் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். 2019-ம் ஆண்டு வெளியாக இருந்த இப்படம் சில காரணங்களால் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்திற்கு அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். நிவாஸ் கே பிரசன்னா படத்தொகுப்பு செய்துள்ளார். இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் டீசர், டிரைலர் மற்றும் பாடல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்