< Back
சினிமா செய்திகள்
சூர்யா 42 படத்தின் புதிய அறிவிப்பு - ரசிகர்கள் உற்சாகம்
சினிமா செய்திகள்

'சூர்யா 42' படத்தின் புதிய அறிவிப்பு - ரசிகர்கள் உற்சாகம்

தினத்தந்தி
|
9 Sep 2022 12:13 AM GMT

இயக்குனர் சிவா இயக்கும் புதிய படத்தில் நடிகர் சூர்யா தற்போது நடித்து வருகிறார்.

சென்னை,

இயக்குனர் சிவா இயக்கும் புதிய படத்தில் நடிகர் சூர்யா தற்போது நடித்து வருகிறார். 'சூர்யா 42' என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர்.

இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் பூஜையுடன் தொடங்கியது.

இந்த நிலையில் 'சூர்யா 42' படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த படத்தின் மோஷன் போஸ்டர் இன்று (09.09.2022) காலை 10 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் செய்திகள்