< Back
சினிமா செய்திகள்
Odela 2: Tamannaah has started the final shoot
சினிமா செய்திகள்

'ஒடேலா 2' : இறுதிக்கட்ட படப்பிடிப்பை துவங்கிய தமன்னா

தினத்தந்தி
|
9 Oct 2024 9:32 AM IST

'ஒடேலா 2' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு துவங்கியுள்ளது.

சென்னை,

தமிழைத்தொடர்ந்து தெலுங்கு, இந்தி என வரிசையாக பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பெரும் ரசிகர் கூட்டத்தையே உருவாக்கி வைத்துள்ளார் நடிகை தமன்னா. சமீபத்தில் அவரது 'பப்ளி பவுன்சர்', 'லஸ்ட் ஸ்டோரிஸ்' போன்ற படங்கள் ஓ.டி.டி.யில் வெளியாகி நல்ல வரவேற்பினைப் பெற்றன.

தற்போது இவர், 'ஒடேலா 2' படத்தில் நடித்து வருகிறார். இது கடந்த 2022-ம் ஆண்டு அசோக் தேஜா இயக்கத்தில் வெளியான 'ஒடேலா ரெயில்வே ஸ்டேஷன்' படத்தின் 2-ம் பாகமாகும். இதையும் முதல் பாகத்தை இயக்கிய அசோக் தேஜாதான் இயக்குகிறார்.

ஹெபா படேல், வசிஷ்ட என் சிம்ஹா,நாக மகேஷ், வம்சி, ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 'காந்தாரா' புகழ் அஜனேஷ் லோக்நாத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் தமன்னா நடிக்கிறார்.

தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஒடேலா கிராமத்தில் துவங்கியுள்ளது. இதனை படப்பிடிப்பை துவங்கி இருக்கும் தமன்னாவின் புகைப்படத்தை பகிர்ந்து படக்குழு தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்