< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
விஜய்யின் 'லியோ' பட டிரெய்லரில் இருந்து ஆபாச வசனம் நீக்கம்..!
|12 Oct 2023 1:00 PM IST
லியோ பட டிரெய்லரில் விஜய் பேசும் ஆபாச வசனம் சர்ச்சையை ஏற்படுத்தியது.
சென்னை,
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், திரிஷா நடித்துள்ள லியோ படம் திரைக்கு வரும் நிலையில் சில தினங்களுக்கு முன்பு படத்தின் டிரெய்லரை சமூக வலைத்தளத்தில் படக்குழுவினர் வெளியிட்டனர்.
அதில் இடம்பெற்ற விஜய் பேசும் ஆபாச வசனம் சர்ச்சையை ஏற்படுத்தியது. பெண்களை இழிவுப்படுத்துவதுபோல் உள்ளது என்று அந்த வசனத்துக்கு எதிர்ப்புகள் கிளம்பின. வசனத்தை நீக்க வேண்டும் என்றும் வற்புறுத்தினர்.
இந்த நிலையில் தணிக்கை குழுவினர் லியோ படத்தில் இருந்து குறிப்பிட்ட சர்ச்சை ஆபாச வசனத்தை நீக்கி யூ ஏ சான்றிதழ் அளித்தனர். தற்போது வலைத்தளத்தில் வெளியான டிரெய்லரில் இருந்தும் அந்த ஆபாச வசனம் நீக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் லியோ டிரெய்லர் ஆபாச வசன சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு உள்ளது.