< Back
சினிமா செய்திகள்
நாகார்ஜுனாவுக்கு நோட்டீஸ்
சினிமா செய்திகள்

நாகார்ஜுனாவுக்கு நோட்டீஸ்

தினத்தந்தி
|
2 Nov 2022 9:13 AM IST

தெலுங்கு பிக்பாஸ் 6-வது சீசன் குறித்து நாகார்ஜுனாவுக்கு ஆந்திரா ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நாகார்ஜுனா நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த அவரது படங்கள் தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்து பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளன. தெலுங்கு பிக்பாஸ் 6-வது சீசனுக்கு நாகார்ஜுனா தொகுப்பாளராக இருக்கிறார். அதற்கும் வரவேற்பு இல்லை. இந்த நிலையில் நாகார்ஜுனாவுக்கு இன்னொரு பெரிய அதிர்ச்சியாக ஆந்திரா ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியை நிறுத்திவிட வேண்டுமென தாக்கலான பொதுநல வழக்கை விசாரித்த நீதிமன்றம் இதன் தொகுப்பாளராக இருக்கும் நாகார்ஜுனாவிற்கு விளக்கம் அளிக்கும்படி இந்த நோட்டீசை அனுப்பியுள்ளது. நாகார்ஜுனா மட்டுமன்றி பிக்பாஸ் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் மற்றும் மத்திய, மாநில அரசுகளுக்கும் கூட பதில் மனு தாக்கல் செய்யும்படி ஐகோர்ட்டில் இருந்து நோட்டீஸ் சென்றுள்ளது. அடுத்து இந்த வழக்கு விசாரணையை 14 நாட்களுக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். நாகார்ஜுனா இந்த சீசனுக்கு பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகி விடுவார் என்று தெரிகிறது. தற்பொழுது பிக்பாஸ் ஷோ 50 நாட்களை முடித்துள்ளது. டிசம்பர் இரண்டாவது வாரத்தில் இந்த சீசன் முடிவடைந்து விடும்.

மேலும் செய்திகள்