< Back
சினிமா செய்திகள்
Not Saif Ali Khan... Do you know who was first choice of Ravana in Adipurush?

image courtecy:instagram@omraut

சினிமா செய்திகள்

சைப் அலிகான் அல்ல... ஆதிபுருஷில் ராவணனாக முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா?

தினத்தந்தி
|
18 Aug 2024 1:12 PM IST

சைப் அலிகானுக்கு முன் ஓம் ரவுத், மற்றொரு பாலிவுட் நட்சத்திரத்தை அணுகி இருக்கிறார்.

சென்னை,

ஆதிபுருஷில் ராவணனாக சைப் அலிகான் நடித்தது ரசிகர்களிடையே எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது. சிலர் அவரை சாடினார்கள், சிலர் அவரது நடிப்பை பாராட்டினர். இருப்பினும், அந்த பாத்திரத்தில் நடிக்க முதலில் அவர் தேர்வாகவில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா?

ஆம், சைப் அலிகானுக்கு முன், ஓம் ரவுத், மற்றொரு பாலிவுட் நட்சத்திரத்தை அணுகி இருக்கிறார். நாம் சொல்லும் நடிகர் வேறு யாருமல்ல, அஜய் தேவ்கன்தான்.

அஜய் தேவ்கன் மற்றும் ஓம் ரவுத் ஆகியோர் கடந்த 2020-ம் ஆண்டு வெளியான 'தன்ஹாஜி: தி அன்சங் வாரியர்' படத்தில் இணைந்து பணியாற்றினர். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இப்படத்தில் சைப் அலிகானும் நடித்திருந்தார். எனவே ஆதிபுருஷில் ராவணனாக நடிக்க ஓம் ரவுத்துக்கு அஜய் தேவ்கன் முதல் தேர்வாக இருந்துள்ளார். இருப்பினும், அஜய் தேவ்கன் பல படங்களில் நடிக்க வேண்டியிருந்ததை காரணம் காட்டி அதை நிராகரித்திருக்கிறார்.

பின்னர், அந்த பாத்திரம் சைப் அலிகானுக்கு சென்றது. இப்படத்திற்காக சைப் அலிகான் 10 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆதிபுருஷ் ஒரு புராணப் படமாகும், இதில் கிருத்தி சனோன், பிரபாஸ், சைப் அலி கான், சன்னி சிங் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். 450 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் ரூ.393 கோடி மட்டுமே வசூலித்தது.

மேலும் செய்திகள்