என்னை விலைக்கு வாங்கும் அளவுக்கு அவர்களுக்கு வசதியில்லை - பிரகாஷ்ராஜ்
|நடிகர் பிரகாஷ்ராஜ் இன்று பா.ஜ.க.வில் சேருகிறார் என தகவல் வேகமாகப் பரவியது.
பெங்களூரு,
நடிகர் பிரகாஷ்ராஜ் பா.ஜ.க. மற்றும் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இதற்கிடையே, நடிகர் பிரகாஷ்ராஜ் இன்று பா.ஜ.க.வில் சேருகிறார் என தகவல் வேகமாகப் பரவியது. ஆனால் இந்த தகவலுக்கு பிரகாஷ்ராஜ் மறுப்பு தெரிவித்துள்ளார்.
குறிப்பாக 'தி ஸ்கின் டாக்டர்' என்ற ஐடி பிரகாஷ் ராஜ் இன்று மதியம் 3 மணிக்கு பாஜகவில் இணைய இருக்கிறார் என்று ட்வீட் செய்திருந்தது.
இந்த ட்வீட்டை அவர் கோட் செய்து தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், 'அவர்களது சித்தாந்தங்களை வைத்து என்னை விலைக்கு வாங்கும் அளவுக்கு அவர்களுக்கு வசதியில்லை. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன்'' எனக் கூறியுள்ளார்.
அரசியலில் பா.ஜ.க. வுக்கு எதிரான நிலைப்பாட்டையே நடிகர் பிரகாஷ் ராஜ் கொண்டிருக்கிறார். பல சமயங்களில் இதை வெளிப்படுத்தவும் இவர் தயங்கியதில்லை. கடந்த 2019 பொதுத் தேர்தலில் பெங்களூரு சென்ட்ரலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.