படப்பிடிப்புக்கு சரியாக வருவது இல்லையா? வதந்திக்கு யோகிபாபு விளக்கம்
|நடிகர் யோகிபாபு சில படங்களின் படப்பிடிப்புக்கு ஒழுங்காக போய் நடித்து கொடுக்கவில்லை என வலைத்தளத்தில் தகவல் பரவியது.
தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக உயர்ந்துள்ள யோகிபாபு தற்போது கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் நாயகனாக நடித்துள்ள 'லக்கி மேன்' படம் திரைக்கு வருகிறது.
யோகிபாபு சில படங்களின் படப்பிடிப்புக்கு ஒழுங்காக போய் நடித்து கொடுக்கவில்லை என வலைத்தளத்தில் தகவல் பரவியது.
இதற்கு விளக்கம் அளித்து யோகிபாபு அளித்துள்ள பேட்டியில் "இதற்கு முன்பு நான் நடித்த சில படங்களில் நாலைந்து காட்சிகள் மட்டும் என்னை வைத்து எடுத்து விட்டு போஸ்டர் வெளியிட்டனர்.
இது ரசிகர்களையும் வினியோகஸ்தர்களையும் ஏமாற்றுவதுபோல் ஆகாதா ஏன் அப்படி போஸ்டர் போடுகிறீர்கள்? என்று கேட்டேன். நான் அப்படி கேட்டதால்தான் பிரச்சினை.
இதனால் நான் படப்பிடிப்புக்கு சரியாக வருவது இல்லை என்று வதந்தி பரப்புகிறார்கள். நான் படப்பிடிப்புக்கு வராமல் எங்கு போவேன். என்னை பற்றி வரும் தகவல்கள் எல்லாம் சும்மா.
நான் கதை கேட்டு நடிப்பதை விட அவர்களின் கஷ்டம் கேட்டுத்தான் நடிக்கிறேன். லக்கி மேன் படம் எனது வாழ்க்கையை திரும்பி பார்ப்பதுபோல் இருந்தது'' என்றார்.