கலைக்கு மரியாதை இல்லை: நடிகை மாளவிகா மோகனன் வருத்தம்
|கலை குறித்து மாளவிகா மோகனன் கருத்து தெரிவித்து உள்ளார்
தமிழில் ரஜினிகாந்துடன் 'பேட்ட', விஜய்யுடன் 'மாஸ்டர்', தனுசின் 'மாறன்' ஆகிய படங்களில் நடித்து பிரபலமான மாளவிகா மோகனன், மலையாளம், கன்னட படங்களிலும் நடித்து இருக்கிறார். தற்போது விக்ரம் ஜோடியாக 'தங்கலான்' படத்தில் நடித்து முடித்துள்ளார்.
சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டும் ரசிகர்களை கிறங்க வைத்து வருகிறார். இந்த நிலையில் கலை குறித்து மாளவிகா மோகனன் கருத்து தெரிவித்து உள்ளார். அவர் கூறும்போது, "சமூகத்தில் கலைக்கு மரியாதை இல்லாத நிலைமை இருக்கிறது. கலையை கேவலம் ஒரு பொருளாகவே பார்க்கிறார்கள். கலையை ஜீவன் இல்லாத பொருளுடன் ஒப்பிட்டு வர்ணனை செய்கிறார்கள்.
கலை மனிதர்களின் வாழ்க்கையோடு தொடர்பு உடையது இல்லை என்ற நிலையையும் உருவாக்கிவிட்டனர். உயிர் இல்லாத பொருட்களையும் அற்புதமான கலை வடிவமாக கலைஞர்கள் உருவாக்குகிறார்கள். ஒவ்வொருவரின் வாழ்க்கை கூட ஒரு கலைதான் என்பதை உணர வேண்டும்'' என்றார்.