< Back
சினிமா செய்திகள்
எது செய்தாலும் குற்றம் கண்டுபிடிப்பு... பிரியங்கா சோப்ரா வருத்தம்
சினிமா செய்திகள்

எது செய்தாலும் குற்றம் கண்டுபிடிப்பு... பிரியங்கா சோப்ரா வருத்தம்

தினத்தந்தி
|
22 April 2023 10:02 AM IST

தமிழில் விஜய் நடித்த 'தமிழன்' படத்தின் மூலம் அறிமுகமான பிரியங்கா சோப்ரா, இந்தியில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். ஹாலிவுட் படங்களிலும் நடிக்கிறார்.

ஏற்கனவே பிரியங்கா சோப்ரா ஆர்.ஆர்.ஆர். படத்தை தமிழ் படம் என்று கூறியது சர்ச்சையானது. அவர் பேசும்போது, "ஆர்.ஆர்.ஆர். தமிழ் படம் பெரிய வெற்றி பெற்று உள்ளது. இது அவெஞ்சர்ஸ் படம் போன்றது" எனக் கூறியிருந்தார். இவரது பேச்சு தெலுங்கு ரசிகர்களை கோபப்படுத்தியது. தெலுங்கு படத்தை தமிழ் படம் என்பதா என்று வலைத்தளத்தில் கண்டித்தனர்.

இந்த சர்ச்சை குறித்து தற்போது பிரியங்கா சோப்ரா விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறும்போது, "சிலர் நான் எதை செய்தாலும் அதில் தவறை கண்டுபிடிக்க முயற்சிக்கின்றனர். அதை ரசிக்கவும் செய்கிறார்கள். சுதந்திர உணர்வோடு முன்பு இருந்தேன். இப்போது எனது குடும்பத்தை நினைத்து கவனமாக இருக்கிறேன்.

வாழ்க்கையில் உயர்ந்த இடத்திற்கு செல்பவர்களை வீழ்த்த பலர் காரணம் தேடுவார்கள். அது போலத்தான் ஆர்.ஆர்.ஆர். பட சர்ச்சையும் கிளம்பி இருக்கிறது. ஆனாலும் எனது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களிடம் எனக்கு அன்பும் ஆதரவும் உள்ளது" என்றார்.

மேலும் செய்திகள்