< Back
சினிமா செய்திகள்
சிவாஜி கணேசனுக்கு சரியான மரியாதையை எந்த அரசும் செய்யவில்லை - இயக்குனர் பாரதிராஜா ஆதங்கம்
சினிமா செய்திகள்

"சிவாஜி கணேசனுக்கு சரியான மரியாதையை எந்த அரசும் செய்யவில்லை" - இயக்குனர் பாரதிராஜா ஆதங்கம்

தினத்தந்தி
|
18 Dec 2022 7:45 PM IST

சிவாஜி கணேசன் இந்த நாட்டின் பொது சொத்து என்று இயக்குனர் பாரதிராஜா தெரிவித்தார்.

சென்னை,

சென்னை சேத்துப்பட்டில் இன்று நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் இயக்குனர் பாரதிராஜா, இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய பாரதிராஜா, சிவாஜி கணேசனுக்கு சரியான மரியாதையை எந்த அரசும் செய்யவில்லை என்றும், பாரதிராஜா பேசுகிறேன் என்றால் அது சிவாஜி கணேசன் போட்ட பிச்சை என்றும் தெரிவித்தார்.

சிவாஜி கணேசன் இந்த நாட்டின் பொது சொத்து என்று குறிப்பிட்ட அவர், அவருக்கு ஈடு இணையான பட்டம் எதுவும் இல்லை என்றும் தெரிவித்தார்.



மேலும் செய்திகள்