< Back
சினிமா செய்திகள்
நடிகை ஆண்ட்ரியாவின் நோ என்ட்ரி டிரெய்லர்
சினிமா செய்திகள்

நடிகை ஆண்ட்ரியாவின் நோ என்ட்ரி டிரெய்லர்

தினத்தந்தி
|
20 Feb 2023 3:40 PM IST

‘நோ என்ட்ரி’ படத்திற்கு அஜேஷ் இசையமைத்துள்ளார், ஜம்போ சினிமாஸ் சார்பில் ஸ்ரீதர் அருணாசலம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

சென்னை

நடிகை ஆண்ட்ரியா ஜெரேமியா தனது ஆக்ஷன்-திரில்லர் படமான 'நோ என்ட்ரி'யுடன் இந்த வருடம் வருகிறார், சோனி மியூசிக் இப்படத்தின் டிரெய்லரை வெளியிட்டு உள்ளது.

இந்தியா-பாகிஸ்தான் மோதலை பின்னணியாகக் கொண்டு இப்படம் மனிதர்களைத் தாக்கும் வைரசால் பாதிக்கப்பட்ட நாய்களைச் சுற்றி வருகிறது. விஜய் சேதுபதி படத்தின் டிரெய்லரை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆர்.அழகுகார்த்திக் எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் ஆண்ட்ரியா ஜெர்மியா, ஆதவ் கண்ணதாசன், மானஸ், ரன்யா ராவ், ஜெயஸ்ரீ மற்றும் ஜான்வி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் 2006 ஆம் ஆண்டு வெளியான 'தி ப்ரீட்' படத்தின் ரீமேக் ஆகும்.

'நோ என்ட்ரி' படத்திற்கு அஜேஷ் இசையமைத்துள்ளார், ஜம்போ சினிமாஸ் சார்பில் ஸ்ரீதர் அருணாசலம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.



மேலும் செய்திகள்